முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பில்லை – சிறைச்சாலை பேச்சாளர்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) கண்காணிப்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகும் வாய்ப்பு இல்லை என அவரது உடல்நிலை காரணமாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்தார்.

ஆனால், நீதிமன்ற நடவடிக்கைகள் Zoom தொழில்நுட்பம் மூலம் நடத்தப்பட வாய்ப்புள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.