முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (ஆகஸ்ட் 10) சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.
இளைஞர் சபைகள் மற்றும் சங்கங்களுடன் தொடர்புடைய தற்போதைய பிரச்சினைகள் குறித்து அவர் தனது கருத்துகளை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய இளைஞர் சேவைகள் சபையை நிறுவிய முன்னோடிகளில் ஒருவராக இருக்கும் விக்ரமசிங்க, அதன் ஆரம்பக் குறிக்கோள்கள் மற்றும் தனது ஆட்சி காலத்தில் அந்த சபையும் இளைஞர் தொடர்பான திட்டங்களும் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டன என்பதையும் கருத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.