கொழும்பில் பலத்த காற்று வீசியதால் பெரும் சேதம்

நேற்று (29) இரவு கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த காற்று வீசியதால், மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு-காலி சாலையில், குறிப்பாக கொள்ளுப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை இடையே பெரிய மரங்கள் விழுந்தன. கிராண்ட்பாஸ் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் இதேபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கிராண்ட்பாஸ், செயிண்ட் ஜோசப்ஸ் சாலையில் ஒரு பாரிய மரம் முறிந்து வீழ்ந்த்ததில் ஆறு வீடுகள் அடைந்துள்ளன . அதிர்ஷ்டவசமாக, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை, மேலும் அனைத்து குடியிருப்பாளர்களும் காயமின்றி தப்பினர்.

மேற்கு, சபரகமுவ, நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மி.மீ.க்கும் அதிகமான கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கிறது.

மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு 50–60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீவின் பிற பகுதிகளில் மணிக்கு 30–40 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.