2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்

 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (மே 6) காலை 7.00 மணி முதல் நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ளது. மாலை 4.00 மணிவரை வாக்களிக்கலாம். மொத்தமாக 13,759 வாக்களிப்பு மையங்களில் தேர்தல் நடைபெறுகின்றது. மொத்தமாக 339 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் அடங்கும். தேர்தலில் 75,589 வேட்பாளர்கள் 49 அரசியல் கட்சிகள் மற்றும் 14 சுயாதீன குழுக்களின் கீழ் போட்டியிடுகின்றனர்.