முன்னாள் ஜனாதிபதி ரணில் CID-யில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) காலை குற்றப்புலனாய்வு துறைக்கு (CID) வந்து கொண்டிருக்கிறார். இது நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகும்.

அவரை இன்று CID-க்கு ஆஜராகுமாறு அழைத்திருந்ததுடன், சம்பந்தப்பட்ட விவகாரத்தில் வாக்குமூலம் பதிவு செய்யுமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இவ்விசாரணை, அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க அவர்களின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்ற சம்பவத்துடன் தொடர்புடையதாகும்.