நீண்ட விடுமுறைகளில் பின்  பாராளுமன்ற அமர்வுகள் தொடங்கின

 இன்று (07) பாராளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் தலைமையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையின் பின் நடைபெறும் முதலாவது அமர்வாகும். இன்றைய விவாதம் காலை 11.30 முதல் மாலை 5.00 வரை நடைபெறும். பின்னர் மாலை 5.00 முதல் 5.30 வரை எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படும் ஒத்திவைக்கும் தீர்மானம் விவாதிக்கப்படும். நாளை, தனிப்பட்ட உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட 6 தீர்மானங்கள் விவாதிக்கப்படும். இதில், மக்களின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைப்பது, மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு வழங்குவது தொடர்பான தீர்மானங்களும் அடங்கும்.