உள்நாட்டு பொறியாளர்களின் தொழில்நுட்ப நுணுக்கங்களால் உருவாக்கப்பட்ட இலங்கையின் மூன்றாவது நானோ செயற்கைக்கோள் நாளை (19) விண்வெளிக்குப் புறப்படவுள்ளது என்று மொரட்டுவைச் சேர்ந்த ஆர்தர் சி. க்ளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.
BIRDS-X Dragonfly எனப் பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள் NASA-வின் SpaceX-33 ராக்கெட் மூலம் ஆகஸ்ட் 24ஆம் தேதி பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதற்கு முன், 2019இல் Ravana-1 மற்றும் 2022இல் KITSUNE எனும் செயற்கைக்கோள்களை இலங்கை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.
அதன்படி, BIRDS-X Dragonfly நானோ செயற்கைக்கோள் நாளை பிற்பகல் 2.15க்கு பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து தனது நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதைக்கு அனுப்பப்பட உள்ளது.
முக்கிய பணி நோக்கங்கள்:
Store-and-Forward தகவல் தொடர்பு அமைப்பு – பயனர் செய்திகள் செயற்கைக்கோளில் பதிவேற்றப்பட்டு, சேமிக்கப்பட்டு பின்னர் பல்வேறு பிராந்தியங்களிலுள்ள தரை நிலையங்களுக்கு அனுப்பப்படும்.