
இந்த ஆண்டு இதுவரை இலங்கையில் 35 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மலேரியா எதிர்ப்பு பிரச்சாரம் (AMC) அறிவித்துள்ளது, இதில் ஒரு மரணம் அடங்கும்.
2016 ஆம் ஆண்டில் இலங்கை அதிகாரப்பூர்வமாக மலேரியா இல்லாததாக அறிவிக்கப்பட்டாலும், சமீபத்திய நோயாளர்களிள் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பிய நபர்கள் என கண்டறியப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மலேரியா எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஆலோசகர் சமூக மருத்துவர் டாக்டர் இந்தீவாரி குணரத்ன, 071 284 1767 என்ற எண்ணைத் தொடர்பு கொள்வதன் மூலம் மலேரியா தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான கூடுதல் தகவல்கள் அல்லது உதவியைப் பொதுமக்கள் பெறலாம் என்று தெரிவித்தார்.